காதலன் இங்கே ...காதலி அங்கே...
என் வீட்டார் வெளிநாட்டு போகச்சொன்னபோது
நானோ மறுத்தேன்..மாட்டேன் என்றேன்...
ஆனால்....
நீயோ போகச்சொன்னாய்..
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களுக்காக நான் காத்திருப்பேன் என்று சொல்லி
அந்த நம்பிக்கையில் நானும் சென்றேன் ..
எனக்காக காத்திருப்பேன் ...
என்று சொன்னதை நம்பி....
வருடங்கள் மூன்று முடிந்தன..
எனக்காக காத்திருக்கும் உன்னைப்பார்க்க
ஆவலோடு கிளம்பி டிக்கெட் பதிவு செய்தேன் ..
பதிவு செய்த தேதியை உனக்கு தெரிவிக்க
நான் உன்னை தொடர்பு கொண்டேன் தொலைபேசியில்
பதிலுக்கு நீயும் சொன்னாய் ..!!!
நீங்கள் பதிவு செய்த அதே தேதியில்
எனக்கும் பதிவு திருமணமென்று ...
?!!
?!!!
?!!!!
?!!!!!
?!!!!!!
எனக்கு என்று சொன்ன நீ
நம் பெற்றோரிடம் நம் காதலை பற்றி சொல்லி
நம் இருவருக்கும் பதிவு திருமணதிற்கு
சம்மதம் வாங்கிய விஷயத்தை மட்டும்
என்னிடம் மறைத்து விட்டாயேடி கள்ளி ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக