
உன் மேனியின் மென்மை கண்டு
உன் பாதம் தாங்கிக்கொள்கிறது
நிலம்.
*
உன் உடல் சிலிர்க்க மழையால்
உன்னை அபிசேகம் செய்கிறது
நீர்.....
*
உன் மென்மையான கண்ணங்களை
முத்தமிடுவதற்க்காக வந்துபோகிறது
தென்றல் காற்று.....
*
உன் பார்வை தன்னை விட
சக்தி வாய்ந்தது என்பதை உன்னை
சுற்றும் வாலிபர்களை பார்த்து
தெரிந்துகொள்ளும் நெருப்பு.....
*
உன் அழகை ரசிப்பதற்காக
இரவில் பல்லாயிரக்கணக்கான
நட்சத்திரத்தை அனுப்பி வைக்கிறது
ஆகாயம்.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக