செவ்வாய், 13 ஏப்ரல், 2010

என் வாழ்கை வரலாறு

என் பெயர் முருகேசன் .சொந்த ஊர் ராமநாதபுரம் (மாவட்டம்)சேமன்வயல்(கிராமம்).என் அப்பா ராமு ,அம்மா மாரியம்மாள் ,அண்ணன் கணேசன் .அப்பா கொஞ்சம் தண்ணி அடிப்பார் (கொஞ்சம் இல்ல ரொம்ப ).அதனால அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்ட வரும் .ஆனா அம்மா ரொம்ப சாது .எவ்வளவு சண்ட போட்டாலும் ,அடிச்சாலும் யாரிடமும் சொல்லமாட்டாங்க.அப்பாவோட வருமானத்த எதிர்பார்க்க மாட்டாங்க .காலைல சீக்கிரமே எந்திருச்சு ,எங்கள பள்ளிகூடத்துக்கு அணிப்பிட்டு தொண்டி(சிட்டி)க்கு பால் கொண்டு போவாங்க ,மாலைல நானும் என் அண்ணனும் வீட்டுக்கு வரும்போது அம்மா வாசல்ல எதிர்பார்த்துட்டு இருப்பாங்க ,நாங்க வந்தவுடனே ட்ரெஸ் மாத்திட்டு சாப்பாடு ரெடியா தட்டுல இருக்கும்.நான் சீக்கிரமே சாப்பிட்ருவேன்,ஆனா என் அண்ணன் அடி வாங்காம ஒரு நாள் கூட சாப்பிட்டதே இல்ல .காலைலும் துளசி சாறு ஒரு டம்ளரும் ,நாட்டு கோழி முட்டையும் தருவாங்க ,வழக்கம் போல அண்ணன் அடி வாங்கிட்டுதான் குடிப்பான் .நான் நல்ல குண்டா இருப்பேன் .அண்ணன் ஒல்லியா கருப்பா இருப்பான். இப்படியே ஏழு வருஷம் சந்தோசமா லைப் போச்சு .பதினெட்டு வருசமா குழந்தை இல்லாததால ரொம்ப சந்தோசமா இருந்தாங்க அம்மா .திடீர்னு ஒரு நாள் நாங்க பள்ளிகூடம் போயிட்டு சாயங்காலம் வரும்போது அம்மா வெளியில இல்ல .நான் வீட்டுக்குள்ள போய் பார்த்தேன் .அம்மா மயக்கமா படுத்திருந்தாங்க ,அப்புறம் தான் தெரிஞ்சுது விஷம் சப்பிட்டுருக்கங்கன்னு ,உடனே எல்லாரும் என்ன என்னவோ மருந்து கொடுத்தாங்க ,சரியா வரலே அப்போ பசெல்லாம் இல்ல .உடனே வண்டியில கொண்டு போனாங்க ,ஆனா அம்மா வழியிலேயே இறந்துட்டாங்க .நான் அப்போ சின்ன பையன் .ரொம்ப அழுதேன் ,அப்படியே ரெண்டு வருஷம் போச்சு அப்பாதான் ரெண்டு வருசமா சமைச்சு போட்டாரு .அப்போ சந்தோசமா இருந்தோம் .ஆனா அதுக்கப்புறம் சொந்தகாரங்க யாரும் சரியாய் கண்டுக்கல ,ஆனா அப்பா கிட்ட எதையோ சொல்லி ரெண்டாவது கல்யாணம் பண்ணிவசுட்டாங்க.நான் சந்தோசமா கல்யாணத்துக்கு கிளம்பிட்டேன் .அண்ணன் வரமட்டேனுட்டான் .அப்புறம் கல்யாணம் முடிஞ்சுது.சித்திக்கு ரெண்டு பொண்ணு.ரேணுகா,ராதிகா,ரொம்ப பாசமா இருப்போம் நானும் என் அண்ணனும் .ஆனா அப்பா இன்னும் மாறவே இல்ல!நானும் என் அண்ணனும் துபாயில்-இருக்கோம்.மாசம் முப்பதாயிரம் வருமானம் வருது . வீடு கட்டிக்கிட்டு இருக்கோம்.
இப்போ எனக்கு என் அண்ணன் கனேசன விட எல்லா வகையிலும் உதவி செய்யுறது தாஸ் (நண்பர்)அண்ணன் தான்...துபாய் ல வந்து ஒரே இடத்துல வேலை செய்தோம்..நண்பர்களா பழகி இப்போ அண்ணன் தம்பி உறவு மாதிரி (இல்ல)அண்ணன் தம்பி தான்...என்னோட எல்லா விசயமும் அவருக்கு தெரியாம இருக்காது...அவ்ளோ க்ளோசா இருப்போம்,,என் அண்ணன் மலேசியா-ல நாலு வருஷம் வேலை பார்த்தான் ஆனா ஒரு சட்டை கூட எடுத்து கொடுக்கல...ஆனா இவரு வருஷம் வருஷம் என் பிறந்த நாளுக்கு ட்ரெஸ் எடுத்து கொடுதிருவார்...என்ன ரொம்ப நல்லா பாத்துக்க கூடிய ஒரு நல்ல அண்ணன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக