ஒரு நாள் அதிகாலை வேளையில்
வேப்பமரத்து நிழலில்
தோழிகளின் சூழலின் நடுவில் நான் .....
நீ மட்டும் இல்லாமல் இருந்தாய்
எனக்கோ தோழிகளின் பேச்சில்
கவனம் இல்லை ....
என் கவனம் எல்லாம் உன்னை
தேடுவதில் மட்டுமே இருந்த்தது ...
என் முகம் மட்டும் புன்னகையை
தோழிகளுக்கு தந்திருந்தது ....
என் இரு விழிகளும் உன்னை
வலை வீசி தேடித்திரிந்தன.....
கண் இமைக்கும் நேரத்தில் நீ
என் முன் வந்து நின்றாய்.....
நேற்று வரை என் மனதில்
மட்டுமே பதிந்திருந்த நீ
இன்று தான் என் இரு விழியிலும் பதிந்தாய் .....
ஆனால் நானோ இன்று தான்
உன் இரு விழிகளில் பதிந்திருக்கிறேன் ...
உன் இரு விழிகளில் பதிந்த நான்
என்று உன்
(மனதில்)பதியப்போகிறேன்..
என் வாழ்நாள் முழுவதும் உனக்காக
(உன்)இதயத்தின் அழைப்பிற்காக
உனக்குள் நான்(ஆக)வர
காத்திருக்கிறேன் கண்ணே (மகாலெட்சுமி).......